தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
குளிர்பதன வசதி உள்ளிட்ட நவீன சென்னை உட்பட முக்கிய நகரங்களில் ரூ.2,000 கோடி செலவில் அமைக்கத் திட்டம்

நாடெங்கும் மிகப்பெரிய காய்கறி விற்பனை மையங்கள்

2 mins read
344a8a20-2e6b-4390-a470-1c3d11b6c3c8
மும்பையில் உள்ள காய்கறிச் சந்தை. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கு அருகில் குளிர்பதன கிடங்கு வசதி உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்ட 50 மிகப்பெரிய காய்கறி விற்பனை மையங்களை உருவாக்க இந்திய அரசு திட்டமிடுகிறது.

கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னை, டெல்லி, மும்பை, கோல்கத்தா, பெங்களூர்,ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களை ஒட்டி 50 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக, அரசாங்கம் - தனியார் துறை பங்காளித்துவத்தில் காய்கறி உற்பத்தி, விநியோகச் சங்கிலிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சு திட்டத்தின் வரையறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது விரைவில் இறுதி செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் பெரிய நகரங்களுக்கு அருகில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத்தரகர்களின் பங்கைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் விவசாயிகளுக்கு லாபகரமான விலையை வழங்க இத்திட்டம் வகைசெய்யும் எனக் கூறப்படுகிறது. நுகர்வோருக்கு நியாயமான விலையில் புதிய காய்கறிகள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இடைத்தரகர்களின்றி விவாசய பொருள்கள் நேரடியாக சந்தைப்படுத்துவதன் மூலம் காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்பதோடு விவசாயிகளுக்கும் தங்கள் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும். தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவையும் பதுக்கல் குறைந்து வினியோகம் சீராக இருப்பதும் உறுதி செய்யப்படும்.

வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதிக மக்கள்தொகை கொண்ட நகர்களுக்கு அருகில் பிரம்மாண்ட காய்கறி சந்தைகள் அமைக்கப்படும். கூட்டுறவு அமைப்புகள், புதிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இந்த காய்கறி சந்தைகள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார்

தொடர்புடைய செய்திகள்

இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்படுத்தும் முகவர், பரவலாக்கப்பட்ட குளிர்பதனக் கிடங்கு வசதிகள், விற்பனை லாரிகள்/வேன்கள் , பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், சங்கங்கள், காலனிகள் போன்ற குடியிருப்புப் பகுதிகளில் குறைந்தபட்சம் 10 சில்லறை விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு முகவைகளுக்கு ஆதரவளிப்பதற்கான ஏற்பாடு இந்தத் திட்டத்தில் இருக்கும்.

குறிப்புச் சொற்கள்