போபால்: மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ-ஜான்சி நெடுஞ்சாலையில் பாகேஷ்வர் நோக்கி சென்ற ஆட்டோ ஒன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 20) அதிகாலை திடீரென சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிபயங்கரமாக மோதியது.
இந்தக் கோர விபத்தில் 1 வயது குழந்தை உள்பட எழுவர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து பற்றி தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அந்த ஆட்டோவில் 13 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

