எதிர்காலத் திட்டங்கள் குறித்து கட்சியினரிடம் ஆலோசித்த கார்கே, ராகுல்

எதிர்காலத் திட்டங்கள் குறித்து கட்சியினரிடம் ஆலோசித்த கார்கே, ராகுல்

2 mins read
552a2ce6-769f-438c-a265-2d07f118d414
(இடமிருந்து) காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி, கட்சிப் பொதுச் செய​லா​ளர்​ பிரி​யங்கா காந்தி. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள், மாநிலத் தலைவர்களுடன் காங்​கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆலோ​சனை நடத்​தினர்.

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்​தலில் காங்​கிரஸ் கட்சி கேரள மாநிலத்​தில் மட்​டும் வெற்றி பெற்று ஆட்​சி​யைப் பிடித்​துள்​ளது.

இந்​நிலை​யில், வியாழக்கிழமை (ஜூன் 11) டெல்​லி​யில் கட்​சி​யின் தேசி​யத் தலை​வர் கார்கே தலை​மை​யில் கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள், நிர்வாகிகளின் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

கூட்டத்தில் கட்சிப் பொதுச் செய​லா​ளர்​கள் பிரி​யங்கா காந்தி, கே.சி.வேணு கோ​பால், ஜெய் ​ராம் ரமேஷ், பூபேஷ் பாகேல், மூத்த நிர்​வாகி​கள், கட்​சி​யின் மாநிலப் பிரிவுத் தலை​வர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இந்நிலையில், கூட்​டத்​தில் கட்​சி​யின் அடுத்த கட்ட நடவடிக்​கைகள், அரசி​யல் போராட்​டங்​களில் ஈடு​படு​தல், கட்​சி​யின் எதிர்​காலத் திட்​டங்​கள் உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் விவா​திக்​கப்​பட்​டன.

“பண வீக்​கம், வேலை​யின்​மை, தேர்வு முறை​கேடு​கள் போன்ற கடுமை​யான சவால்​களை நாடு எதிர்​கொண்டு வரு​கிறது. இந்நிலை​யில் கல்வி அமைப்பு தொடர்​பான சர்ச்​சைகள் மில்லியன் கணக்கான இளையர்​களையும் அவர்​களது குடும்​பத்​தினரையும் பாதித்துள்ளது,” என்று திரு கார்கே தமது சமூக ஊடகப் பக்​கத்​தில் கூறினார்.

“பாதிக்​கப்​பட்ட மாணவர்​கள், இளையர்களைத் தனிப்​பட்ட முறை​யில் சந்​தித்த கட்​சி​யின் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, அவர்​களு​டன் நிற்​ப​தாக உறுதி அளித்​துள்​ளார். நீட் தேர்​வு, பணி நியமனத் தேர்வு விவ​காரங்​களில் காங்​கிரஸ் கட்சி போராட்டத்தை முன்​னெடுக்​கும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“அரசி​யல் போராட்​டத்தை முன்​னெடுப்​பது மட்டுமல்லாமல், இந்​தி​யா​வின் அரசி​யலமைப்​பு, ஜனநாயகம், சமூக நீதி​யைப் பாது​காப்​பதும் நமது பொறுப்​பாகும்,” என்று கார்கே பதிவிட்டார்.

மாநிலங்​களவைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்​காக காங்​கிரஸ் மூத்த தலை​வர் மீனாட்சி நடராஜன்​ ​தாக்​கல்​ செய்​த வேட்​புமனு நி​ராகரிக்​கப்​பட்​ட விவகாரம்​ தொடர்​​பாக​வும்​ கூட்​டத்​தில்​ வி​வா​திக்​கப்​பட்​ட​தாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்