அன்றாடம் உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தெருநாய்

அன்றாடம் உணவளித்தவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற தெருநாய்

கோப்புப் படம்: ஜாக்ருதி

25 Nov 2026 - 10:00 pm

1 mins read

போபால்: தன்னை அன்புடன் கவனித்து நாள்தோறும் உணவளித்து வந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் இறுதி ஊர்வலத்தில், தெருநாய் ஒன்று அமைதியாகப் பங்கேற்று தனது விசுவாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலம், சிஹோர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

அங்கு வசித்து வந்த மோகன்லால் ரைக்வர் (75) என்ற ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், தனது பகுதியில் சுற்றித்திரிந்த ‘காளு’ என்ற தெருநாய்க்கு நாள்தோறும் உணவளித்து வந்தார். இதனால், மோகன்லாலுக்கும் காளுவுக்கும் இடையே ஆழமான பாசப்பிணைப்பு உருவானது.

இந்நிலையில், மோகன்லால் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியபோது, காளுவும் கூட்டத்துடன் அமைதியாகப் பின்தொடர்ந்து மயானம்வரை சென்றது.

இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, தனது அன்புக்குரியவரின் உடலுக்கு அருகிலேயே காளு பொறுமையாகக் காத்திருந்தது அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச் செய்தது.

இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தின்போதும், அங்கு வந்த காளு கூட்டத்தினரை நோக்கி நடந்து சென்று அமைதியாக அமர்ந்தது. அப்போது மோகன்லாலின் நினைவாக அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

தகனம் முடிந்த பின்னர் உறவினர்களும் நண்பர்களும் மோகன்லாலின் வீட்டுக்குச் சென்றபோதும் காளு அவர்களுடன் சென்றது. சிறிது நேரம் அங்கிருந்த காளு, தனது பாசத்துக்குரியவருக்கு இறுதி மரியாதை செலுத்திய நிறைவோடு அமைதியாக அங்கிருந்து நகர்ந்தது.

குறிப்புச் சொற்கள்