செய்தித்தாளில் உணவுப் பண்டங்களைக் கட்டிக்கொடுத்தால் கடும் நடவடிக்கை

செய்தித்தாளில் உணவுப் பண்டங்களைக் கட்டிக்கொடுத்தால் கடும் நடவடிக்கை

2 mins read
4b180e7e-9f1c-48dc-9af1-24817fbe8809
பழைய செய்தித்தாள்களில் உணவுப் பண்டங்களை மடித்துக் கொடுப்பது சட்டப்படி தவறு என்பதை உணர்ந்து உணவங்காடிகள் நடந்துகொள்ள வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: மக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் வகையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை விதிமுறைகள் 2018 சட்டத்தின்கீழ் செய்தித்தாள்களில் வடை, சமோசா, போண்டா உள்ளிட்ட உணவுப் பண்டங்களைப் பொட்டலமாகக் கட்டி விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தேநீர்க் கடைகள் உள்ளிட்ட பல கடைகளில் சூடான வடை, போண்டா, பஜ்ஜி, வடை, சமோசா, சாட் வகை உணவுகளைப் பழைய செய்தித்தாள்களில் கட்டி விநியோகிக்கின்றனர்.

இந்தச் செயலுக்கு எதிராக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. செய்தித்தாள்களில் உள்ள எழுத்துகளின் மை அந்தப் பலகாரங்களில் கலந்து உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும். எனவே, மக்கள் இதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தரநிர்ண ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உணவு விற்பனையாளர்களும் உணவக உரிமையாளர்களும் பழைய செய்தித்தாள்களில் உணவுப் பண்டங்களை மடித்துக் கொடுப்பது சட்டப்படி தவறு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், அவ்வாறு சட்டத்தை மதிக்காதவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

செய்​தித்​தாள்களில் உள்ள கறுப்பு மையில் தீங்கு விளைவிக்​கும் ரசாயனங்​கள், சாயங்​கள் மற்​றும் ஈயம் போன்​றவை உள்​ளன. சூடான உணவைச் செய்​தித்​தாள்மீது வைக்​கும்போது, இந்த மை உருகி உணவோடு கலந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது.

இது தீவிர உடல்​நலப் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தும் என்று எப்​எஸ்​எஸ்ஏஐ எச்​சரித்​துள்​ளது. செய்​தித்​தாள்​களில் உணவைப் பொட்​டல​மாக மடித்துக் கொடுப்​பது குறித்து அறிந்​தால், உடனடி​யா புகார் அளிக்க வேண்​டும்​ என்​றும்​ உணவுப் பாதுகாப்பு, தரநிர்ணய ஆணையம் அறி​வுறுத்​தியுள்​ளது.

குறிப்புச் சொற்கள்