தொழில்நுட்ப உலகில் கடந்த சில மாதங்களாகவே 'சேட் ஜிபிடி' பிரபலமாக உள்ளது.
கேட்கும் கேள்விகளுக்கு பெரும் அளவில் சரியான பதிலைத் தரும் 'சேட் ஜிபிடி' ஊழியர்களுக்கு மட்டும் அல்ல மாணவர்களுக்கும் பல வகையில் உதவிவருகிறது.
சிரமமான பல பணிகளை எளிதில் முடிக்க உதவும் 'சேட் ஜிபிடி'யை மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர்.
அண்மையில் இந்தியாவில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில ஆசிரியர் வீட்டுப்பாடம் கொடுத்துள்ளார்.
மாணவர்கள் அனைவரும் வீட்டுப்பாடத்தை ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வீட்டுப்பாடத்தைக் கண்ட ஆசிரியர் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியாக ஒரு வரியை எழுதியிருந்ததைக் கவனித்துள்ளார்.
" செயற்கை நுண்ணறிவான எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கருத்துகளும் இல்லை" என்ற வாசகம் அனைவரது வீட்டுப்பாடத்திலும் இருந்ததைப் பார்த்தார்.
'சேட் ஜிபிடி'யைப் பயன்படுத்திய மாணவர்கள் அந்த வரியை அழிக்க மறந்துவிட்டதாக ஆசிரியர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தனர். அது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் ஆசிரியர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் இந்த சுட்டித்தனத்தைக் கண்ட இணையவாசிகள் " ஈ அடிச்சான் காப்பி" என்றுமே அழியாத வாக்கியம் என்று நகைச்சுவையுடன் கூறிவருகின்றனர்.