பீகார்: தேர்வு மையம் ஒன்றின் வாயிற்கதவு மூடப்பட்ட நிலையிலும் பீகாரைச் சேர்ந்த மாணவி ஒருவர், அதற்கு அடியில் எப்படியோ சென்றதைக் காட்டும் காணொளி, இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
காணொளிக்கு இதுவரை 1.2 மில்லியனுக்கும் மேற்பட்ட ‘லைக்’ கிடைத்துள்ளது.
மாணவியும் மற்ற பலரும் தேர்வு மையத்தை தாமதமாக வந்தடைந்ததும் தவறுதான்.
தாமதமாக வருவோர் நுழையாதபடி வாயிற்கதவு மூடப்பட்டுவிட்டது.
மாணவர்கள் சிலர் தங்களைத் தேர்வு எழுத விடுமாறு கெஞ்சினர்; சிலர் மனமுடைந்து வீடு திரும்பினர்.
ஆனால், ஒரு மாணவி மட்டும் விடுவதாக இல்லை. மஞ்சள் நிற உடையில் இருந்த அவர், கூட்டத்தை முண்டியடித்துக்கொண்டு சென்று தரையில் படுத்துவிட்டார்.
பின்னர், தரைக்கும் வாயிற்கதவுக்கும் இடையே அவர் சறுக்கிப் புகுந்திட முயன்றார். அவரின் முயற்சியும் கைகூடியது!
காணொளி தொடர்பாக ஓர் இணையவாசி, “கடவுள் ஒரு கதவை அடைத்தால், கதவுக்கு அடியில் போகலாம் என்பதற்கு அந்தப் பெண் ஓர் உதாரணம்,” என்று பதிவிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இதுதான் பீகார். இங்கு எதுவும் சாத்தியமே,” என்றார் மற்றொருவர்.

