மாணவர்களுக்குப் போராடும் உரிமை உள்ளது: உச்ச நீதிமன்றம் கருத்து

மாணவர்களுக்குப் போராடும் உரிமை உள்ளது: உச்ச நீதிமன்றம் கருத்து

2 mins read
220a82bd-8c7a-413a-9830-3f12044d590a
தமக்கும் மாணவர்களுக்கும் இடையேயான பிரச்சினையில் வழக்கறிஞர் மன்றம் தலையிட்டது ஏன் என்றும் இந்தியத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.  - கோப்புப்படம்: என்டிடிவி
Google News Preferred Icon

புதுடெல்லி: மாணவர்களுக்கு போராடும் உரிமை உள்ளது என்றும் அவர்களை வழக்கறிஞர் மன்றத்தால் தடுக்க முடியாது என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

தமக்கும் மாணவர்களுக்கும் இடையேயான பிரச்சினையில் வழக்கறிஞர் மன்றம் தலையிட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு மாணவர்களையும் கரப்பான் பூச்சிகளையும் ஒப்பிட்டுத் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஹைதரா​பாத்​தில் உள்ள தேசிய சட்​டப் படிப்பு, ஆராய்ச்சி நிறுவன பட்​டமளிப்பு விழாவுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அழைக்​கப்​பட்டது மாணவர்​கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

தங்கள் ஏதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக துணை வேந்தருக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, மாணவர்கள் இது​போன்ற நடவடிக்​கையில் ஈடுபட்டால் வழக்கறிஞர் மன்றத்தில் அவர்​களைப் பதிவு செய்ய முடி​யாது என்​று இந்​திய வழக்கறிஞர் மன்றத் தலை​வரும் பாஜக எம்​.பி.​யு​மான மன்​னன் குமார் மிஸ்ரா எச்​சரிக்கை விடுத்​திருந்தார்.

மேலும் தேசிய சட்​டப் படிப்பு, ஆராய்ச்சி நிறு​வனத்​தின் 2026ஆம் ஆண்டு மாணவர்களை மாநில வழக்கறிஞர் மன்றத்தில் வழக்​கறிஞர்​களாக பதிவு செய்ய கூடாது என்றும் அவர் ஒரு சுற்​றறிக்​கை ​அனுப்​பி​னார்.

இதையடுத்து சில வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அம்மனுவை விசாரித்தது.

அப்போது, தாம் மாணவராக இருந்த போதும் இன்றுள்ள மாணவர்களைப் போல் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.

ஜனநாயக முறை​யில் அமை​தி​யாகப் போராடும் மாணவர்​களை அனு​ம​திக்க வேண்​டும் என்றும் அதில் எந்த அமைப்பும் தலை​யிடத் தேவை இல்​லை என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

“எது குறித்தும் மாணவர்கள் நேரடியாக எனக்கு கடிதம் எழுதலாம். தேசிய சட்​டப் படிப்பு, ஆராய்ச்சி நிறுவன மாணவர்​கள் தங்​கள் படிப்பை முடித்து விரை​வில் வழக்​கறிஞ​ராக பதிவு செய்ய வேண்​டும். அவர்​களை உடனடி​யாக சட்ட உதவி மையத்​தில் பணி அமர்த்த தயா​ராக உள்​ளேன்,” என்று தலைமை நீதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உச்ச நீதிமன்றம்தலைமை நீதிபதிமாணவர்கள்வழக்கறிஞர்மாணவர்கள் போராட்டம்