தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்திய வீரர்

1 mins read
0f286314-e9c3-4336-a5d7-6847df9cee6a
சுபான்ஷு சுக்லா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து அனைத்துலக விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் வீரர் எனும் பெருமையைப் பெற உள்ளார் சுபான்ஷு சுக்லா.

இவர் வரும் மே மாதம் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4’ என்ற திட்டத்தின்கீழ், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குப் பறக்கவுள்ளார்.

இம்முறை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’வும், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான ‘இஸ்ரோ’வும் இணைந்து, 2025ஆம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு சில வீரர்களை அனுப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் வீரர்களில் இந்தியாவின் சுபான்ஷு சுக்லாவும் ஒருவர்.

இவர் இந்திய விமானப்படையில் அனுபவம் வாய்ந்த விமானியாகப் பணியாற்றுகிறார். மே மாதம் அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, சுக்லா உள்ளிட்ட வீரர்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு செல்கிறார்கள்.

39 வயதான குரூப் கேப்டன் சுக்லா உத்தரப் பிரதேச மாநில தலைநகரான லக்னோவைச் சேர்ந்தவர். கடந்த 2006ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். இவருக்கு 2,000 மணிநேரம் வானில் பறந்த அனுபவம் உண்டு.

மிக் சுகோய், ஜாகுவார், என்-32 எனப் பல்வேறு வகைப் போர் விமானங்களை இயக்கிய அனுபவம் பெற்றவர் சுக்லா.

கடந்த 1984ஆம் ஆண்டு இந்தியா சார்பாக முதன்முதலாக ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்று திரும்பினார். தற்போது விண்வெளி ஆய்வு நிலையத்துக்குச் செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை சுக்லாவுக்குக் கிடைக்க உள்ளது.

குறிப்புச் சொற்கள்