தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'நகைச்சுவை இல்லை, உங்கள் பிரதமர் என் மருமகன்'; சுதா மூர்த்தியின் தன்னடக்கம்

1 mins read
205234cb-8bf6-41b9-8fa5-de58a3fb3b7b
படம்: சுதா மூர்த்தி/டுவிட்டர் -

எழுத்தாளர், ஏழைகளுக்கு நன்கொடை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுபவர் சுதா மூர்த்தி.

அவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை உருவாக்கிய நாரயண மூர்த்தியின் மனைவி. பிரிட்டன் பிரதமர் ரி‌ஷி சுனக்கின் மாமியார்.

அண்மையில் சுதா பிரிட்டன் சென்றிருந்தார். அந்தப் பயணம் குறித்து 'தி கபில் சர்மா ‌ஷோ' என்னும் பிரபல நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

குடிநுழைவு அதிகாரி சுதாவிடம் எங்கு தங்கப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளார், அதற்கு அவர் 10 டவுனிங் ஸ்திரீட் என்று பதில் சொல்லியிருக்கிறார்.

அதற்கு அந்த அதிகாரி நகைச்சுவை செய்ய வேண்டாம் என்று கூற, சுதா பொறுமையாக பிரதமர் ரி‌ஷி தமது மருமகன் என்று கூறியுள்ளார்.

இவ்வளவு தன்னடக்கத்துடன் சுதா செய்த செயல் இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

எவ்வளவு பணம், புகழ், அதிகாரம் இருந்தாலும் அதை வெளிகாட்டாமல் சுதா நடந்து கொள்பவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என்று பலர் புகழ்ந்துள்ளனர்.

சுதா நிகழ்ச்சியில் பேசும் காணொளியும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்