சென்னை: கூகல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை சென்னையில் வசித்த வீட்டை அவரது தந்தை விற்றுள்ளார்.
சிறு வயதில் சென்னை அசோக் நகரில் வசித்தார் சுந்தர் பிச்சை. அந்த வீட்டை தாம் வாங்கியதாக தமிழ்த் திரைப்பட நடிகர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
“சுந்தர் பிச்சை வாழ்ந்த வீடு என தெரிந்ததும், அதனை வாங்க முடிவு செய்தேன். அவரது தந்தை ரெகுநாத பிச்சை வாங்கிய முதல்
சொத்து இது. வீட்டுக்கான ஆவணங்களை அளித்த போது அவர் கண் கலங்கினார். எந்தவொரு கட்டத்திலும் அவர் தனது மகனின் பெயரைப் பயன்படுத்தவில்லை,” என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.