கோல்கத்தாவில் தொண்டர்கள் மோதல்: நால்வர் உயிரிழப்பு

கோல்கத்தாவில் தொண்டர்கள் மோதல்: நால்வர் உயிரிழப்பு

1 mins read
872b285f-eecb-4947-89fc-bd0514c925b8
தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை என கூறியுள்ளார் மம்தா பானர்ஜி. - படம்: ஏஎஃப்பி

கோல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகர் கோல்கத்தாவில் அரசியல் கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் மூண்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் கிடைத்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது கருதப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து மேற்கு வங்கத்தில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் இம்முறை தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் எதிரெதிர் துருவங்களில் உள்ள இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் இடையே மோதல்கள் வெடித்தன.

அப்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கட்சித் தொண்டர்கள் இருவர் கொல்லப்பட்டதாக பாஜக கூறியுள்ளது. இதேபோல் தங்கள் கட்சித் தொண்டர்கள் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டதாக திரிணாமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள முதல்வர் மம்தா, தேர்தல் முடிவுகளை ஏற்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்