தலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சு முதல்முறையாகப் பேச்சு

1 mins read
0b6a919b-a2a6-4ece-afb8-ec94ac02218d
ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கியுடன் (வலது) இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்‌ரி. - படம்: எக்ஸ் தளம்

துபாய்: ஆப்கானிஸ்தானின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாக்கியை இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்‌ரி முதல் முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பு ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் நகரில் நிகழ்ந்தது.

ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அவசரமாகத் தேவைப்படும் மேம்பாடுகளை உடனடியாகச் செய்து தர தான் தயாராக இருப்பதைச் சந்திப்பின்போது இந்தியா தெரிவித்தது.

அதே வேளையில், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட ஆப்கான் மண்ணைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது என்ற வாக்குறுதியையும் தலிபானிடமிருந்து இந்தியா பெற்றுக்கொண்டது.

2021ஆம் ஆண்டில் தலிபான் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, இருநாடுகளின் உயர் அதிகாரிகள் சந்தித்துக்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு கசந்து வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் தலிபானின் செயல்பாடுகள், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ஆகியவை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபானைக் கோபப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்