புதுடெல்லி: இந்தியாவில் அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அருணாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகியவை 2, 3ஆம் இடங்களில் உள்ளன.
குற்றங்களின் அடிப்படையில் வழங்கப்படும் புள்ளிக் கணக்குகளின் கீழ், உத்தரப் பிரதேசம் 7.4 புள்ளிகளும், அருணாச்சலப் பிரதேசம் 5.8, ஜார்க்கண்ட் 5.3 புள்ளிகளும் பெற்றுள்ளன.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் மக்கள் தொகை குறைவுதான் என்றாலும், கடினமான நிலப்பரப்பு காரணமாக, அங்கு காவல், கண்காணிப்புப் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகம் என்பதால் கிராமப்புறங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை.
இந்தப் பட்டியலில் மேகாலயா (5.1), டெல்லி (5.0), அசாம் (4.4), சட்டீஸ்கர் (4.0), ஹரியானா மற்றும் ஒடிசா (3.8) ஆகியவை, முறையே 4 முதல் 10ஆம் இடங்களின் உள்ளன.