வெளிநாட்டு சொத்துகளை மறைத்த 25,000 பேருக்கு வரித்துறை எச்சரிக்கை

வெளிநாட்டு சொத்துகளை மறைத்த 25,000 பேருக்கு வரித்துறை எச்சரிக்கை

1 mins read
99789c5a-2a64-485f-87de-001edc8758fb
வரித்துறை நோட்டீஸ். - படம்: கோப்புப்படம்
Google News Preferred Icon

புதுடெல்லி : வெளிநாட்டு சொத்துகள் தொடர்பான விபரங்களைத் தங்களது வருமான வரி தாக்கலில் தெரிவிக்காத 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் தொடர்பாக இவை அனுப்பப்பட உள்ளன. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இவர்கள் அனைவரும் அதிக பிரச்சினைக்குரியவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். தகவல்களைத் தானாகப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின்கீழ், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதற்கட்டமாக கிட்டத்தட்ட 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்பி, வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்படும்.

தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் நடுப்பகுதியில் இருந்து மற்றவர்களுக்கும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்