திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானையான ஸ்கந்தன், திடீரென மிரண்டு பாகனை தாக்கியது.
தன்மீது அமர்ந்து இருந்த பாகனை கீழே தள்ளிய கோவில் யானை, ஆக்ரோஷத்துடன் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த பாகன் முரளிதரன் நாயர், 58, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
முதலில் பாகன் முரளிதரன் நாயரை ஸ்கந்தன் யானை தாக்கியபோது, அவரைக் காப்பாற்ற துணைப் பாகன் முயற்சி செய்தார்.
இதில் துணைப் பாகன் சுனில் குமாரும் படுகாயம் அடைந்தார்.
அவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கேரளாவில் நடந்துள்ள கோவில் யானை தாக்கி பாகன் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.