ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுப்பயணிகள்மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 22) துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பகுதியில் இருக்கும் பைசரன் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்காக அந்தப் பகுதியில் ஒரு பெரிய தேடலைப் பாதுகாப்புப் படையினர் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, இது ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாவின் உச்சக் காலம். எனவே, எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி அமர்நாத் யாத்திரையைக் கெடுக்க முயற்சிக்கின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத் தலைவர் இந்தியாவும் பாகிஸ்தானும் முற்றிலும் வேறுபட்டவை என்று கூறியதைத் தொடர்ந்து, ஜம்மு, காஷ்மீரில் பாதுகாப்பு உச்சநிலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின.