தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும்: உமர் அப்துல்லா

1 mins read
74f0e973-34b6-4f43-9552-a568be21f6c6
காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஸ்ரீநகர்: “பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தைத் தமது அரசு வலுப்படுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

“துப்பாக்கியால் பயங்கரவாதியைக் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்” என்று ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான விவாதத்தில் உமர் அப்துல்லா பேசினார்.

“மக்கள் நம்முடன் இருக்கும்போது தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ நிச்சயம் முடிவுக்கு வரும். பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் கோபத்தைக் கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், அதுவே அதன் முடிவின் தொடக்கமாகும்,”

“ஜம்மு காஷ்மீர் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தன்னிச்சையான போராட்டங்கள் நடந்தன. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் ஸ்ரீநகரின் ஜாமியா பள்ளிவாசலில் முதல்முறையாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது,” என்றார் உமர் அப்துல்லா

குறிப்புச் சொற்கள்