ஜெனிவா: பாகிஸ்தானைத் தொடர்ந்து, பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டி உள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தூதர் அனுபமா சிங் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுகிறார்கள் என்பதை உலக நாடுகள் மறந்துவிடக் கூடாது எனக் குறிப்பிட்டார்.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அங்குள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பதை இந்தியா உறுதி செய்தது என்றார்.
“சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக தவறான தகவலை பாகிஸ்தான் பரப்புகிறது. எனினும், இந்தியா தனது தரப்பை உலக அரங்கில் தெளிவாக முன்வைக்கும்,” என்றார் அனுபமா சிங்.
இவர் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு ஆதரவாக ஏராளமானோர் பின்னூட்டமிட்டுள்ளனர்.