தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் முதல் டெஸ்லா காட்சியகம்

1 mins read
3ca767f7-d2a2-4c66-bb20-b07bebc83b44
டெஸ்லா கார். - படம்: teslarati.com / இணையம்

மும்பை: இந்தியாவில் தனது முதல் கார் காட்சியகத்தை மும்பை நகரின் பாண்ட்ரா குர்லா வளாகத்தில் திறக்கவுள்ளது இலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம்.

அண்மையில் அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, திரு மஸ்க்கைச் சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். ஏற்கெனவே இந்தியாவின் வரி விதிப்பு முறை குறித்து கவலை தெரிவித்த திரு மஸ்க், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்குக் கிட்டத்தட்ட 100 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுவது நியாயமற்றது எனக் கூறியிருந்தார்.

அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மத்திய அரசாங்கம் புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் களமிறங்க திரு மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்தியாவில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பாக டெஸ்லா வெளியிட்ட விளம்பரத்தில் 13 பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

இந்தியாவில் ஆள்சேர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதன் மூலம் டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே, டெஸ்லா தனது உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்குவது நியாயமாக இருக்காது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சாடியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்