டெஸ்லாவின் பறக்கும் கார்: இந்தியாவில் முன்பதிவு தொடக்கம்

டெஸ்லாவின் பறக்கும் கார்: இந்தியாவில் முன்பதிவு தொடக்கம்

படம்: தி வீக்

20 Oct 2026 - 3:38 pm

2 mins read

புதுடெல்லி: மின்சார வாகனத் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான டெஸ்லா, தனது அதிநவீன அடுத்த தலைமுறை ‘ரோட்ஸ்டர்’ (Tesla Roadster) ஸ்போர்ட்ஸ் காருக்கான முன்பதிவை இந்தியாவில் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

மொத்த வாகன உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இந்த மின்சார சூப்பர்கார், இரு முக்கிய ரகங்களில் முன்பதிவுக்குக் கிடைக்கிறது.

‘பெர்ஃபார்மன்ஸ்’ ரகத்தின் அடிப்படை மாடலை முன்பதிவு செய்ய மொத்தமாக ரூ. 50.06 லட்சம் தேவை. இதில் ஆரம்பக் கட்டணமாக ரூ. 5.01 லட்சமும், பத்து 10 நாள்களுக்குள் மீதமுள்ள ரூ. 45.05 லட்சத்தையும் செலுத்த வேண்டும்.

அதேவேளையில், ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்தின் காற்று உந்தித் தொழில்நுட்பத்துடன் (Air Thrusters) கூடிய அதிவேக ‘த்ரஸ்ட்’ பதிப்பிற்கு முன்பதிவுத் தொகையாகவே ரூ. 2.50 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்கட்டமாக ரூ. 5.01 லட்சமும், எஞ்சிய ரூ. 2.45 கோடியை அடுத்த 10 நாள்களுக்குள்ளும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

டெஸ்லா ரோட்ஸ்டர் கார், ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் 0 முதல் 97 கிலோமீட்டர் (60 mph) வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்று அந்நிறுவனம் உரிமை கோருகிறது.

மேலும், இதன் உச்ச வேகம் மணிக்கு 370 கிலோமீட்டருக்கும் மேல் இருக்கும் என்றும் காற்றில் லேசாக மிதந்து சாகசம் செய்யும் வகையில் வடிவமைப்பு அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு என்றும் டெஸ்லா தெரிவித்துள்ளது.

இந்த கார்களின் அதிகாரபூர்வ உற்பத்தி 2028ஆம் ஆண்டில்தான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்தியச் சாலைகளுக்கான விநியோகக் காலம் குறித்து டெஸ்லா இன்னும் தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்
டெஸ்லாகார்முன்பதிவு