புதுடெல்லி: இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் 458,000 ஆக இருந்த கோடீஸ்வரக் குடும்பங்கள் 2025ஆம் ஆண்டில் 871,700 ஆக அதிகரித்துள்ளது.
இக்குடும்பங்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ .40.5 லட்சம் கோடி என்று மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா செல்வ அறிக்கை 2025 (Mercedes-Benz Hurun India Wealth Report 2025) தெரிவித்துள்ளது.
1 கோடியே 8.5 லட்சம் ரூபாய்க்கு மேல் நிகர மதிப்புள்ள குடும்பங்கள் கோடீஸ்வர குடும்பங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் செல்வந்தர்கள் அதிகம் வாழும் தலைநகராக மும்பை தொடர்ந்து உள்ளது. அங்கு 1,42,000 கோடீஸ்வரக் குடும்பங்கள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் டெல்லி (68,200), பெங்களூரு (31,600) உள்ளன.
மாநில அளவில், மகாராஷ்டிரா 1,78,600 கோடீஸ்வரக் குடும்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் பங்குச் சந்தை, சொத்துச் சந்தை, தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்கிறார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அமெரிக்கா முக்கிய இடமாக உள்ளது.
இவர்களில் 60 விழுக்காட்டினர் தங்கள் ஆண்டுச் செலவு ஒரு கோடி ரூபாய்க்குள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.