எந்தப் போரிலும் இரண்டாம் இடம் கிடையாது: முப்படைத் தலைமைத் தளபதி

1 mins read
7ae5cf05-78d5-4885-bd2d-72d3b8adc7d0
அனில் சவுஹான். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்கு அறிவார்ந்த, தகவல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற வீரர்கள் தேவை என இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், எந்தப் போரிலும் இரண்டாம் இடம் என்பதே கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.

“போர்களில் இரண்டாவது வெற்றியாளர் (ரன்னர் அப்) என யாரும் கிடையாது. எனவே எந்த ராணுவமும் தொடர்ந்து எச்சரிக்கையாக இருப்பதுடன், எத்தகைய நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

“ஆப்பரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. நாம் ஒரு நாளின் 24 மணி நேரமும், ஓராண்டின் 365 நாள்களும் தயார் நிலையில் இருக்கிறோம்,” என்றார் அனில் சவுஹான்.

குறிப்புச் சொற்கள்