திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம், பேரணிக்குத் தடை

திருப்பரங்குன்றம் தீபம்: போராட்டம், பேரணிக்குத் தடை

கோப்புப் படம்: பிபிசி

23 Nov 2026 - 5:13 pm

2 mins read

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசை எதிர்த்து பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.

தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற அனு​மதி வழங்கி உச்ச நீதி​மன்​றம் பிறப்பித்த இடைக்​கால உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் சீராய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்​கை​யைக் கண்​டித்​து, சென்னை புரசை​வாக்​கம் பகு​தி​யில் தமிழக பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாஜக மாநிலச் செய​லா​ளர் வினோஜ் பி.செல்​வம், மாவட்​டத் தலை​வர் கிரி உள்​ளிட்ட நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் திரளாகப் பங்​கேற்​று கையில் அகல் விளக்​கு​களை ஏந்தி அரசுக்கு எதி​ராக முழக்கமிட்டனர்.

ஆர்ப்​பாட்​டத்​தில் பங்​கேற்​றவர்​கள் செய்தியாளர்களிடம் கூறிய​போது, “தமிழக அரசு சீராய்வு மனு தாக்​கல் செய்​திருப்​பது தவறு. அந்த மனுவை அரசு திரும்​பப் பெற வேண்​டும். திருப்​பரங்​குன்​றம் தீபத்​தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்​டும்,​’’ என்​று தெரிவித்தனர்.

இதற்கிடையே, திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாநகரக் காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், “தீபம் ஏற்றப்படும் நாளில் திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில் இதுபோன்ற செயல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,” எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் நாளை கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு இருக்கும் நிலையில், அரசின் வழக்கறிஞர் விஜய் நாராயணனுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், அரசு உயர் அதிகாரிகள், மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்