தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரேநாளில் 2.17 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரேநாளில் 2.17 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை

2 mins read
38a731d3-5901-452d-8337-d795b1738b0a
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கப்பலில் இருந்து சரக்குகளை இறக்கும் பாரந்தூக்கி. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

தூத்துக்குடி: தூத்​துக்​குடி வஉசி துறை​முகம் ஒரே​நாளில் 2.17 லட்​சம் டன் சரக்​கு​களைக் கையாண்டு புதிய சாதனை படைத்​துள்​ளது.

இதுதொடர்பாக, அத்துறை​முக ஆணையத் தலை​வர் சுசாந்​தகு​மார் புரோகித் வெளி​யிட்​டுள்ள அறிக்கையில், “தூத்​துக்​குடி வஉசி துறை​முக ஆணை​யம் கடந்த 5ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு லட்சத்து 17,332 மெட்​ரிக் டன் சரக்கு​களைக் கையாண்டு புதிய சாதனையைப் படைத்​துள்​ளது. இதன் மூலம் இதற்கு முன்பு கையாண்ட 2 லட்சத்து 16,631 மெட்​ரிக் டன் என்ற சாதனை முறியடிக்​கப்​பட்​டுள்​ளது,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “நிலக்​கரி 62,466 டன், அனல்​மின் நிலக்​கரி 49,067 டன், சுண்​ணாம்​புக்​ கல் 20,671 டன், கந்தக அமிலம் 10,188 டன்,செம்பனை எண்ணெய் 5,400 டன், சர்க்​கரை 1,771 டன், பொதுச் சரக்​கு​கள் 774 டன், காற்​றாலை இறக்​கைகள் 68 டன், 66,927 டன் சரக்​குப் பெட்டகச் சரக்​குகள் கையாளப்​பட்​டுள்​ளன. 2026 ஆகஸ்ட் மாதத்​தில் துறைமுகம் 35.35 லட்​சம் டன் சரக்​கு​களைக் கையாண்​டுள்​ளது. இது, 2025 ஆகஸ்ட் மாதத்​தில் கையாளப்​பட்ட 32.33 லட்​சம் டன்​னுடன் ஒப்​பிடு​கை​யில், 9.36 விழுக்காட்டு வளர்ச்சி,” என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஏப்​ரல் முதல் ஆகஸ்ட் வரையி​லான கால​கட்​டத்​தில், துறை​முகம் மொத்​த​மாக 18.27 மில்​லியன் டன் சரக்​கு​களைக் கையாண்​டுள்​ளது. முந்​தைய ஆண்​டுடன் ஒப்​பிடு​கை​யில், இது 2.10 விழுக்காட்டு வளர்ச்​சி​யாகும். துறை​முகத்​தில் உள்ள உயர்திறன் பாரந்தூக்​கி​களின் பயன்​பாடு, அதிக அளவி​லான சரக்​கு​களைக் கையாள உதவி​யதாகக் கூறப்பட்டது.

மேலும், “எதிர்​கால வளர்ச்​சிக்கு உறு​துணை​யாக சரக்குத் தளம்-7 நவீன சரக்குப் பெட்டக முனைய​மாக மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. சரக்குத் தளம் 10 உரு​வாக்​குதல், வடக்கு சரக்குத் தளம்-3 இயந்​திரமய​மாக்​கல் போன்ற பணி​களும் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதி கூடு​தலாக, 40 ஏக்​கர் பரப்​பில் விரி​வாக்​கப்​பட்டு வரு​கிறது.

“வஉசி துறை​முகம் இந்தச் சாதனையை எட்​டு​வ​தற்கான ஒருங்​கிணைந்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. வரவிருக்​கும் உள்​கட்​டமைப்பு வசதி​கள் நிறைவடைந்​ததும், துறை​முகத்​தின் சரக்​குக் கையாளும் திறன் மேலும் அதி​கரித்​து, கிழக்​குக் கடற்​கரை​யின் முக்​கியக் கடல்​சார் நுழை​வாயி​லாக வலுப்​பெறும். வட்டாரப் பொருளியல் வளர்​ச்​சிக்​குக் குறிப்​பிடத்​தக்​க பங்​களிப்​பைத் துறை​முகம்​ வழங்​கும்,” என்றும் அறிக்கையில் கூறப்​பட்​டுள்​ளது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாதமிழ்நாடுதுறைமுகம்சரக்குசாதனை