தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜம்மு ரயில் நிலையத்துக்கு புறா மூலம் துண்டுச்சீட்டு மிரட்டல்

1 mins read
f597a636-58bd-4dbf-b877-328001b81071
காலில் கட்டப்பட்டிருந்த துண்டுச்சீட்டுடன் எல்லைப் பகுதியில் பறந்து வந்த ஒரு புறாவைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர். - படம்: ஊடகம்

ஜம்மு: புறாவின் கால்களில் துண்டுச்சீட்டைக் கட்டி, ஜம்மு ரயில் நிலையத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பதற்றம் நிலவியது.

ஜம்முவில் இருந்து ஏறக்குறைய 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆர்எஸ் புரா பகுதி. இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்தப் பகுதி எப்போதுமே பாதுகாப்புப் படையின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் இருக்கும்.

இந்நிலையில், அங்குள்ள ரயில் நிலையத்தில் மிக விரைவில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) காலில் கட்டப்பட்டிருந்த துண்டுச்சீட்டுடன் எல்லைப் பகுதியில் பறந்து வந்த ஒரு புறாவைப் பாதுகாப்புப் படை வீரர்கள் பிடித்தனர்.

பின்னர், அதன் காலில் இருந்த துண்டுச்சீட்டைப் பிரித்துப் பார்த்தபோது, அதில், ‘காஷ்மீர் எங்களுடையது. அதற்கான நேரம் வந்துவிட்டது,’ என்று உருது, ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஜம்மு ரயில் நிலையத்திலும் அதனையொட்டியுள்ள எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் தரப்பில் இருந்து இவ்வாறு திட்டமிட்ட மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் ராணுவம் முழு விழிப்பு நிலையில் இருந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்