அமெரிக்கப் பொருளியல் கண்காணிப்புக் குழுவில் மூன்று இந்தியர்கள்

அமெரிக்கப் பொருளியல் கண்காணிப்புக் குழுவில் மூன்று இந்தியர்கள்

1 mins read
30892d0b-a5d3-45da-92aa-88766b51ace4
(இடமிருந்து) ரகுராம் ராஜன், ராஜ் ஷெட்டி, ஆஷா ஷர்மா. - படங்கள்: தினமலர்

புதுடெல்லி: அமெரிக்கப் பொருளியல் கண்காணிப்புக் குழுவில் மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அந்நாட்டின் மத்திய வங்கித் தலைமையில் பல்வேறு கண்காணிப்புக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இக்குழுக்களில் இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளியல் நிபுணர் ராஜ் ஷெட்டி, மைக்ரோசாஃப்ட் செயல் துணைத் தலைவர் ஆஷா ஷர்மா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அந்நாட்டு மத்திய வங்கியின் நிதிக்கொள்கையை மேம்படுத்தவும் ஐந்து நிபுணர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒரு குழுவில் ரகுராம் ராஜன் உறுப்பினராக இடம்பெறுவார்.

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் தலைமையிலான குழு வங்கியின் நிதிக்கொள்கைகளைச் செயல்படுத்துதல், அவற்றின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளைத் தயார் செய்யும்.

இக்குழுவில் உறுப்பினராகச் செயல்படும் ரகுராம் ராஜனின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதேபோல் வெவ்வேறு கண்காணிப்புக் குழுக்களில் ராஜ் ஷெட்டி, ஆஷா ஷர்மா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் புதிய குழுக்களில் மூன்று இந்திய வம்சாவளி நிபுணர்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நோபெல் பரிசு பெற்ற தாமஸ் சார்ஜன்ட், வால்மார்ட் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி டக் மெக்மில்லன் ஆகியோரும் இந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்