ராய்ப்பூர்: சத்தீஸ்கர் என்கவுன்டரில் 3 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்த தொடங்கியதையடுத்து தற்காப்புக்காக பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 2 பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர்.

