அமராவதி: ஆந்திராவின் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள தலகோணா கோயிலுக்குச் சென்றவர்களை யானைகள் தாக்கியதில் மூவர் உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த மூவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னமய்யா மாவட்டத்தின் ஒபுலவரிப்பள்ளி கிராமத்திலுள்ள வனப்பகுதி வழியாக தலக்கோணா கோயிலுக்கு 30 பேர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) பாத யாத்திரை சென்று கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலை 2.30 மணியளவில் அங்கு வந்த யானைக் கூட்டம் ஒன்று அவர்களை விரட்டி, தாக்கியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 15 யானைகள் அடங்கிய கூட்டம் பக்தர்களைத் தாக்கியிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.