போர்பந்தர்: போர்பந்தரில் கடலோரக் காவல் படையின் அதிநவீன ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் மூவர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம், போர்பந்தரில் கடலோரக் காவல் படையின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 5) ஈடுபட்டிருந்தது. அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டர் தீப்பற்றியது.
இந்தச் சம்பவத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரு விமானிகள் உட்பட மூவர் காயமடைந்தனர்.
அவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மூவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது.