திருப்பதி லட்டு வழங்குவதில் புதிய முறை

திருப்பதி லட்டு வழங்குவதில் புதிய முறை

1 mins read
8d03733c-05dc-4c0f-b571-c14b54a63357
படம்: இந்திய ஊடகம் -

திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு பக்தர்களிடையே மிகவும் பிரபலம் என்பதால் அதை வாங்கிச்செல்ல பக்தர்கள் தவறுவதில்லை.

லட்டை வாங்கிச்செல்லும் பக்தர்களுக்கு அதை வைப்பதற்கு பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், தாள்களால் செய்யப்பட்ட பைகள் கோவிலில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், லட்டை எடுத்துச்செல்ல பனை, தென்னை ஆகியவற்றால் செய்யப்பட்ட ஓலை பெட்டிகளை விற்பனை செய்யப்போவதாக கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

பெட்டிகள் மூன்று அளவுகளில் விற்கப்படும். 10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் பெட்டிகள் விற்கப்படும்.

இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கோவில் நிர்வாகம் நம்புகிறது.