தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதி: கால்வாய்களில் குப்பை கொட்டினால் அபராதம்

1 mins read
d799b1df-b36b-4963-9085-3b5834fafd53
திருப்பதி மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர் மவுரியா நரபு ரெட்டி. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: கால்வாய்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் எனத் திருப்பதி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி மாநகராட்சி ஆணையர் மவுரியா நரபு ரெட்டி பிப்ரவரி 25ஆம் தேதி அப்பகுதியின் துப்புரவுப் பணிகளைச் சுகாதாரம், பொறியியல், நகரமைப்பு, வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து, பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர்.

அப்போது, பாதாள சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். சாக்கடை கால்வாய்களில் குப்பை கொட்டப்படுவதால், சாக்கடைகள் தேங்கி நிரம்பி வழிவதால் மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் எனக் கூறிய ஆணையர் கால்வாய்கள், பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், “துப்புரவு பணியாளர்கள் தினமும் அனைத்துப் பகுதிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். பாதாளச் சாக்கடை கால்வாய்கள் எங்கும் நிரம்பி வழிந்தால், ஊழியர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுகாதாரத்தை பராமரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்,” என்றார் ஆணையர்.

குறிப்புச் சொற்கள்