தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதி இலவச தரிசனம்: 20 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்த பக்தர்கள்

1 mins read
a374b503-0fd5-47be-8d98-e63a138e5f8e
திருப்பதி மலையில் உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் காலணி அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஊடகம்

திருப்பதி: திருப்பதியில் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் அலைமோதி வருகிறது. சனிக்கிழமை காலை (ஏப்ரல் 13) வைகுண்ட வரிசை வளாகங்கள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது.

பக்தர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பால்,காபி உள்ளிட்டவை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.

இதற்கிடையே திருப்பதியில் வெள்ளிக்கிழமை 72,923 பேர் தரிசனம் செய்தனர். 35,571 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என்று தெரிவிக்கப்பட்டது.

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மேலும், திருப்பதி மலையில் குறிப்பிட்ட சில இடங்களில் பக்தர்கள் செருப்பு அணிந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஏழுமலையான் கோவில் பாரம்பரியத்தை காப்பாற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்