திருப்பதி கோவில் ஓராண்டு உண்டியல் காணிக்கை ரூ.1,738 கோடி

திருப்பதி கோவில் ஓராண்டு உண்டியல் காணிக்கை ரூ.1,738 கோடி

1 mins read
3940a0f8-418f-4da6-94b5-4022a40f01ae
நடப்பாண்டில் பக்தர்களின் காணிக்கை மூலம் ரூ.1,880 கோடி கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: விகடன்
multi-img1 of 2

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 2025-26 நிதியாண்டில், உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ.1,738 கோடி செலுத்தியுள்ளனர். நடப்பாண்டில் காணிக்கை மூலம் ரூ.1,880 கோடி கிடைக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் திருப்பதி கோவில் நிர்வாகத்தின்கீழ் உள்ள அறக்கட்டளைகளுக்கு ரூ.1,300 கோடி நன்கொடையாகத் திரண்டது. இந்தத் தொகையானது நடப்பாண்டில் ரூ.140 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு வங்கிகளில் ஏறக்குறைய ரூ.17,000 கோடி ரொக்கத்தையும் 12,000 கிலோ தங்கத்தையும் வைப்புத்தொகையாகக் கொண்டுள்ளது திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம்.

கோவிலுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

அயோத்தி, மதுரா கோவில்களில் பக்தர்களின் காணிக்கைகள் திருடப்பட்டதாகப் புகார்கள் வெளிவந்துள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளை எண்ணும் நடவடிக்கைகள் முதல் அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் பெறுவது வரை அனைத்திலும் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்