கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதந்த டன் கணக்கிலான மீன்கள்

கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதந்த டன் கணக்கிலான மீன்கள்

2 mins read
மீனவர்கள் மறியல்; மாசுக்கட்டுப்பாடு, மீன்வள அதிகாரிகள் ஆய்வு
b9d988ce-56db-4e61-b279-2a311d30f1b5
எண்​ணூர்க் கழி​முகத்​துக்கு அருகே கொசஸ்​தலை​யாற்​றில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) செத்து மிதந்த மீன்கள். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: எண்​ணூர்க் கழி​முகத்​துக்கு அருகே கொசஸ்​தலை​யாற்​றில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) டன் கணக்​கிலான மீன்கள் செத்து மிதந்​த நிலையில், தொழிற்​சாலை ரசாயனக் கழி​வு​கள் ஆற்​றில் கலந்​த​தால்தான் மீன்​கள் இறந்​திருக்​கும் என மீனவர்​கள் குற்​றம்​சாட்​டியுள்ளனர்.

இறந்த மீன்​களை எண்​ணூர்-தாழங்​குப்​பம் விரைவுச்சாலையில் கொட்டி, எண்​ணூர்ப் பகு​தி​ மீனவர்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

மணலி, எண்​ணூர்ப் பகு​தி​களில் மத்​திய, மாநில அரசுகளின் பொதுத்​துறைத் தொழிற்​சாலைகள், தனி​யார் தொழிற்​சாலைகள் இயங்கி வரு​கின்​றன. இதனால் இப்​பகு​தி​ வழி​யாகச் செல்​லும் கொசஸ்​தலை​யாறு, எண்​ணூர்க் கழி​முகப் பகு​தி​கள் சுற்​றுச்​சூழல் பாதிப்​புக்கு உள்​ளாகி வரு​கின்​றன.

கடல்​வாழ் உயி​ரினங்​களின் இனப்​பெருக்கப் பகு​தி​யாக விளங்​கும் இந்தப் பகு​தி​களில் கடல்வாழ் உயி​ரினங்​கள் முற்​றாக அழிந்​து, சுற்​றுச்​சூழல் கெடும் நிலை ஏற்​பட்​டிருப்​ப​தாக மீனவர்​கள் குற்​றம்​ சாட்டு​கின்​றனர்.

இந்நிலையில் தங்​களின் வாழ்​வா​தா​ரமே கொசஸ்​தலை​யாறும், எண்​ணூர்க் கழி​முக​மும்தான் என்று கூறிய மீனவர்கள், “மீன்​கள் இறந்ததற்கு இப்​பகு​தியைச் சுற்​றி​யுள்ள தொழிற்​சாலைகள் வெளி​யேற்​றும் கழி​வு​கள்தான் காரணம். எனவே கொசஸ்​தலை​யாறு மாசடை​யும் பிரச்​சினைக்கு நிரந்தரத் தீர்வு​ காணவேண்​டும். வாழ்​வா​தா​ரத்தை இழந்த மீனவர்​களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். விதி​மீறலில் ஈடு​பட்ட தொழிற்​சாலைமீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்,” என்​று வலியுறுத்தினர்.

இதற்​கிடை​யில் மாசுக்​கட்​டுப்​பாடு வாரி​யம், மீன்​வளத்​துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதி​காரி​கள் மீன்​கள் இறந்து கிடந்த பகு​தி​யில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்​கொண்​டு மீன் மாதிரி​களைச்​ சேகரித்து ஆய்​வுக்கு அனுப்​பி​யுள்​ளனர். மேலும், முதற்​கட்ட ஆய்​வறிக்​கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்​ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

“மீன்​கள் இறந்த பகு​தி​யில் எண்​ணெய்க் கசிவோ தொழிற்​சாலைக் கழி​வு​களோ ஆற்​றில் கலந்​ததற்​கான அறிகுறிகள் கண்​டறியப்​பட​வில்​லை. இறந்த மீன் மாதிரி​களை ஆய்​வுக்கு அனுப்​பியுள்ளோம். முடிவு​கள் வந்த பிறகே மீன்​கள் இறந்ததற்கான காரணம் தெரிய​வரும்,” என்​று அவர்கள் கூறினர்.

இவ்வேளையில், பாமக தலை​வர் அன்​புமணி, “ஆற்​றில் செத்து மிதக்​கும் மீன்​களை அகற்றி அப்​பகு​தி​யில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்​டும்,” என்று தம் அறிக்கையில் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

தமிழக வாழ்​வுரிமைக் கட்​சித் தலை​வர் தி.வேல்​முரு​கன் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “பா​திக்​கப்​பட்ட மீனவர்​களுக்கு உடனடி நிவாரணத்​துடன்​ உரிய இழப்​பீடும்​ வழங்​க வேண்​டும்,​” என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மீன்மீனவர்கள்அதிகாரிஆய்வு

தொடர்புடைய செய்திகள்