தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் உறைந்துபோன ஏரியில் சிக்கிக்கொண்ட சுற்றுப்பயணிகள் (காணொளி)

1 mins read
4e0bb8d6-dc61-4d4b-a241-34c48009a9d0
உறைந்துபோன ஏரி. - மாதிரிப் படம்: wall.alphacoders.com / இணையம்

இத்தநகர்: இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணிகள் சிலர் உறைந்துபோன ஏரியில் சிக்கிக்கொண்டனர்.

குளிர் காலத்தில் சுற்றுப்பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் செலா பாஸ் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. பெண்கள் இருவர் உட்பட சுற்றுப்பயணிகள் நால்வர் அங்கு உறைந்துபோன ஏரியில் சிக்கிக்கொண்டனர்.

காலுக்குக்கீழ் உள்ள ஐஸ் கட்டி உடைந்ததும் அவர்கள் உள்ளே விழுந்தனர். அதனைத் தொடர்ந்து பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டது. வழிப்போக்கர்கள் உடனடி நடிவடிக்கை எடுத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்று இந்துஸ்தான் டைமஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உதவிக்கு அலறிக்கொண்டிருந்த சுற்றுப்பயணிகளை வழிப்போக்கர்கள் மூங்கில் குச்சிகளைக் கொண்டு காப்பாற்றினர்.

இச்சம்பவம் பதிவான காணொளி சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவின் நாடாளுமன்ற விவகார அமைச்சரும் சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சருமான கிரண் ரிஜ்ஜுவும் எக்ஸ் தளத்தில் காணொளியைப் பகிர்ந்துகொண்டார்.

இத்தகைய இடங்களில் குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயத்தை இக்காணொளி எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு அதிகாரிகள், சுற்றுப்பயணிகளைக் கேட்டுக்கொள்கின்றனர்.

அபாயகரமான பகுதிகளுக்குப் போகும்போது கவனமாக நடந்துகொள்ளுமாறு திரு கிரண் ரிஜ்ஜு சுற்றுப்பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்