அமெரிக்கா-இந்தியா இடையிலான நான்கு நாள் இடைக்கால வர்த்தக உடன்பாட்டுப் பேச்சுவார்த்தை திங்கட்கிழமை (ஜூன்) தொடங்கியது.
அமெரிக்கத் தலைமைப் பேச்சாளர் பிரண்டன் லிஞ்ச், இந்தியத் தரப்பில் வர்த்தகத் துறைக்கான கூடுதல் செயலாளர் தர்பன் ஜெயின் ஆகியோர் வர்த்தகப் பேச்சை வழிநடத்தவுள்ளனர்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனையடுத்து, அனைத்து நாடுகளுக்கும் 150 நாள்களுக்கு 10 விழுக்காடு சீரான வரி இவ்வாண்டு பிப்ரவரி 24ஆம் மாதம் விதிக்கப்பட்டது.
இம்மாற்றங்களால் பிப்ரவரி கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு, ஏப்ரலில் வாஷிங்டனில் பேச்சுவார்த்தை நடந்தது.
அடுத்தக்கட்ட நகர்வுக்காக பிரண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்கக் குழு ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அதன் முடிவில் இரு நாட்டுக்கும் இடையே வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கத் தொழிற்துறைப் பொருள்கள்,காய்ந்த தானியங்கள், சிவப்புச் சோளம், பழவகைகள் போன்ற வேளாண் பொருள்கள் ஆகியவற்றிற்கான வரிகளைக் குறைக்க இந்தியா முன்மொழிந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஐந்து ஆண்டுகளில் $500 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க எரிசக்திப் பொருள்கள், விமானங்கள், அவற்றின் உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டில், இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக அமெரிக்கா விளங்கியது குறிப்பிடத்தக்கது.

