கேங்க்டாக்: அரசாங்க நிறுவனங்கள், வங்கி ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் வியாழக்கிழமைகளில் பாரம்பரிய உடை அணிந்துவர வேண்டும் என சிக்கிம் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில உள்துறை அமைச்சு நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், “சிக்கிமின் வளமான கலாசாரத்தைப் பாதுகாக்க, அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் எடுத்துவரும் முயற்சிகளில் அரசு ஊழியர்கள் அனைத்து வியாழக்கிழமைகளிலும் பாரம்பரிய உடை அணிந்துவரும் உத்தரவும் ஒன்று. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “சிக்கிமின் வளமான கலாசாரத்தை அடுத்த தலைமுறையினரிடையே எடுத்துச் செல்வதும், அரசு ஊழியர்களிடையே பாரம்பரிய மதிப்புகளை மேம்படுத்துவதும் இதன் நோக்கம்,” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

