ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைரவாவும் அவரது நண்பர்களும் திறந்தவெளியில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியுள்ளனர். இதனைக் காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், விதிகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக அவருக்கு ரூ.7,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை முதல்வர் மகனின் வாகனத்திற்குப் பின்னால், காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கியபடி சென்றது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது. இச்சம்பவம் குறித்து பேசிய துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா, “என்னுடைய மகன் பள்ளி உயர் கல்வி தான் பயின்று வருகிறார். அவருடன் பள்ளி மாணவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்காகவே காவல்துறை வாகனம் பின்னால் சென்றது,” என்று கூறினார்.