ஒடிசா: விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கியது

1 mins read
804b7a09-e068-4a35-94f5-22b8c27c18dd
மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். படம்: ராய்ட்டர்ஸ் -

பாலேஸ்வர்: இந்தியாவின் ஆக மோசமானதொரு ரயில் விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில் பயணிகள், சரக்கு ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

சமிக்ஞைத் தொழில்நுட்பக் கோளாறு மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட அவ்விபத்து நிகழ்ந்தது.

முதலில் 288 பேர் இறந்துவிட்டதாக அதிகாரபூர்வமாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் ஒடிசா மாநில அரசு அவ்வெண்ணிக்கையை 275ஆகக் குறைத்து அறிவித்தது.

காயமடைந்த 1,175 பேரில் இன்னும் 382 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசா மாநிலம், பாலேஸ்வர் அருகே கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவ்விபத்து நிகழ்ந்தது.

இந்நிலையில், நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் ஒன்று, விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்திற்குப் பிறகு, முதலாவதாக அவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

சேதமடைந்த தண்டவாளங்கள் அனைத்தும் முழுமையாகச் சீரமைக்கப்பட்டுவிட்டனவா என்ற விவரம் தெரியவில்லை.