திருடனை மூச்சுவாங்க வைத்த தண்டனை

திருடனை மூச்சுவாங்க வைத்த தண்டனை

1 mins read
04579028-4a08-4900-ab6c-866fe48deeb5
உடலுறுதிக்கூட உரிமையாளரிடம் வசமாக மாட்டிக்கொண்ட திருடன் உடற்பயிற்சி செய்ய வேண்டியதாயிற்று. - படங்கள்: எக்ஸ்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் திருடுவதற்காக ஓர் உடலுறுதிக் கூடத்திற்குள் புகுந்த ஆடவருக்கு, வித்தியாசமான தண்டனையை வழங்கினார் அந்தக் கூடத்தின் உரிமையாளர்.

விலைமதிப்புள்ள பொருள்களை எடுக்கச் சென்றவருக்கு, இறுதியில் ‘டிரெட்மில்’ உடற்பயிற்சி சாதனத்தில் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது.

நள்ளிரவு நேரத்தில் மூடப்பட்டிருந்த உடலுறுதிக் கூடத்திற்குள் சென்ற அந்தத் திருடன், என்னென்ன திருடலாம் என்று அவ்விடத்தில் வலம்வந்தபோது தனது ஒவ்வோர் அசைவையும் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பதை அறியத் தவறிவிட்டார்.

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த உடலுறுதிக்கூட உரிமையாளர், திருடன் இருக்கும் காணொளியைப் பார்த்த உடனே அவ்விடத்திற்குச் சென்றுவிட்டார்.

திருடன் கையும் களவுமாகப் பிடிபட்டான். ஆனால், காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பதற்கு முன் அந்த உரிமையாளர் வேறு ஒரு தண்டனையைத் திருடனுக்காக வைத்திருந்தார்.

Watch on YouTube

ஆடவர் அந்த உடற்பயிற்சி சாதனத்தில் ஓடிக் களைத்துப் போனபோதும் தொடர்ந்து ஓட வேண்டும் என்று உடலுறுதிக்கூட உரிமையாளர் உத்தரவிடுவதைத் தற்போது பரவலாகப் பகிரப்படும் காணொளி ஒன்றில் காண முடிகிறது.

திருடனுக்குச் சரியான பாடம் புகட்டிய திருப்தியுடன் பின்னர் அந்த உரிமையாளர் திருடனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

குறிப்புச் சொற்கள்