கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் உள்ளது.
அங்கு ஒரு கப்பலின் பாதுகாப்பு ரகசியங்கள் தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு சென்றுசோதனை நடத்தியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடற்படை ஊழியர்கள் வசிக்கும் அலுவலக குடியிருப்புகள், கப்பல் கட்டும் தளத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தேசிய புலனாய்வு முகமை நடத்திய இந்த திடீர் சோதனை அவ்வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோதனை எவ்வளவு நேரம் நீடித்தது போன்ற மேல் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

