புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா முதல்வராகப் பொறுப்பேற்றார்.
தேர்தலில் 22 இடங்களை மட்டுமே பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமிக்கப்படுவதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி குழுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதிஷி செய்தியாளா்களிடம் பேசினார்.
“டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி கட்சி ஒரு வலுவான எதிா்க்கட்சிக்குரிய பங்கை ஆற்றும். பேரவையில் அனைத்து பிரச்சினைகளையும் முழு பலத்துடன் எழுப்புவோம்.
“குறிப்பாக, ஆளும் கட்சியான பாஜக மக்களிடம் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றச் செய்வதை ஆம் ஆத்மி உறுதி செய்யும்.
“மாா்ச் 8ஆம் தேதிக்குள் டெல்லியுள்ள மகளிருக்கு ரூ.2,500 உதவித்தொகை வழங்குவதாக பிரதமா் நரேந்திர மோடி தோ்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்தாா்.
“முதலில் இந்த வாக்குறுதியை முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசை நிறைவேற்றச் செய்வோம்,” என்றாா் அதிஷி.