பன்னூன் வழக்கில் திருப்பம்

பன்னூன் வழக்கில் திருப்பம்

1 mins read
d7cbc479-a45a-420a-8339-c32880036663
விகாஷ் யாதவ். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலை முயற்சி வழக்கில் முக்கிய சதிகாரர் என்று விகாஷ் யாதவை அமெரிக்கா குற்றஞ்சாட்டிய சில வாரங்களுக்குப் பிறகு, மிரட்டி பணம் பறித்த வழக்கில் டெல்லி காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர்.

டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினரால் யாதவ் கைது செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

திகார் சிறையில் அடைக்கப்பட்ட யாதவ், நான்கு மாதங்களுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார் என பதிவுகள் காட்டுவதாக அச்செய்தி தெரிவித்தது.

கடந்த வெள்ளியன்று, யாதவ் மீது அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டி உள்ளது. பணத்திற்காக கொலை மற்றும் பணமோசடி வழக்கில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்க குற்றச்சாட்டு ஆவணங்களில் யாதவ் இந்திய அரசின் ஊழியர் என்று குறிப்பிடப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்தார்.

“யாதவ் இந்திய அரசாங்க ஊழியர் இல்லை,” என்று அந்த அதிகாரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்