ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டரை வயது குழந்தை மீட்பு

1 mins read
80633d8b-e849-47c8-81b2-d6dd28514e02
18 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.  - படம்: ஊடகம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பாண்டூகி என்ற இடத்தில் புதன்கிழமை மாலை இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று 35 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகள் சென்றனர்.

குழந்தை 35 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டது, அதனால் குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடந்தன.

மேலும் குழாய் மூலம் உயிர்வாயுவும் அனுப்பப்பட்டது, கேமரா மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்