தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோல்கத்தாவில் இரு போலி அழைப்பு நிலையங்கள் கண்டுபிடிப்பு; 16 பேர் கைது

1 mins read
e7cea02a-6077-4f79-a489-4360b07f07bf
கைது செய்யப்பட்ட 16 பேரும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களையும் படங்களில் காணலாம். - படங்கள்: கோல்கத்தா காவல்துறை/ ‘எக்ஸ்’ தளம்

கோல்கத்தா: கோல்கத்தாவில் இயங்கிவந்த இரு போலி அழைப்பு நிலையங்களைக் காவல்துறை கண்டுபிடித்தது. அதன் தொடர்பில், 16 பேரைக் கைது செய்துள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 24) தெரிவித்தனர்.

கோல்கத்தாவின் செலிம்பூரில் உள்ள அழைப்பு நிலையம் ஒன்றிலும் பெஹாலாவில் செயல்பட்டுவந்த இரு அழைப்பு நிலையங்களிலும் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது அவை போலி அழைப்பு நிலையங்கள் என்பது தெரியவந்தது.

அங்கிருந்து பல கைப்பேசிகள், கணினிகள், மடிக்கணினிகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அந்தப் போலி அழைப்பு நிலையங்கள் மூலம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களைத் தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் தொடா்பு கொண்டு அவர்களை மிரட்டிப் பெரும் தொகையை வசூலித்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.

இவர்களுக்குத் தேசிய, அனைத்துலக மோசடிக் கும்பலுடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கோல்கத்தா காவல்துறையினர் கூறினர்.

குறிப்புச் சொற்கள்