காணொளி பதிவுசெய்த இளையர்கள் ரயில் மோதி பலி

1 mins read
1c2250eb-c791-4f6c-8843-529c054c8046
கைப்பேசியில் காணொளி பதிவுசெய்துகொண்டிருந்த இளையர்கள் இருவரும் ரயில் மோதி உயிரிழந்தனர். - படம்: இந்திய ஊடகம்

இட்டாவா: காணொளி ஒன்றைப் பதிவுசெய்வதற்காக இக்டில் ரயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தில் நின்றிருந்த இரு இளையர்கள், ரயில் மோதி உயிரிழந்ததாக காவல்துறையினர் நவம்பர் 1ஆம் தேதி தெரிவித்தனர்.

அனுஜ் குமார், 20, ரஞ்சித் குமார், 16 ஆகிய அவ்விருவரும் ஹிரண்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

தங்களின் வீடுகளிலிருந்து அதிகாலையில் புறப்பட்ட அவர்கள், டெல்லி-ஹவ்ரா ரயில் பாதையில் தங்களது கைப்பேசிகளில் காணொளி பதிவுசெய்துகொண்டிருந்தனர்.

அப்போது ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. அருகிலிருந்த கிராம மக்கள் உடனே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இளையர்களின் உடல்கள் மிக மோசமாகச் சிதைந்துவிட்டதால் அவர்களின் உடைமைகளைக் கொண்டு இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

அகமதாபாத்தில் சாயம் பூசுபவர்களாக வேலை செய்த அவ்விரு இளையர்களும், தீபாவளிக்காக ஊர் திரும்பியதாக அறியப்படுகிறது.

இதற்கிடையே, சட்ட நடவடிக்கை தொடர்வதாகவும் உடல்கள் உடற்கூறு ஆய்வுச் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
காணொளிரயில் விபத்துஉயிரிழப்பு