கேரளாவில் மேலும் இருவர் நிபா தொற்றால் பாதிப்பு

1 mins read
8ffe23f7-3217-4bae-878b-ad537db88408
கேரளாவை நிபா கிருமித் தொற்று அச்சுறுத்தி வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

திருவனந்தபுரம்: கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா கிருமித் தொற்று, மேலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலப்புரத்தை சேர்ந்த 24 வயது வாலிபர் நிபா தொற்று பாதிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 267 பேரில் அறிகுறியின் அடிப்படையில் ஆறு பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

இதில் இருவருக்கு நிபா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் மலப்புரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் மாநில அரசு, நிபா வைரஸ் பரவலைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்