தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து கேரளா திரும்பிய இருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு

1 mins read
fd9d215c-b73d-4ca0-8ad1-e37ef2ed6975
கேரளாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் காணப்பட்டால், அதுபற்றி சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. - படங்கள்: இந்திய ஊடகம்

கண்ணூர்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் இருந்து கேரளாவின் கண்ணூருக்கு வந்து சேர்ந்த இருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் பரியாரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கூடுதலாக தனி படுக்கைப் பிரிவுகளை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு, கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.

நிலைமையைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அமைச்சர் தலைமையில், மாநில அளவிலான விரைவு பொறுப்புக் குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த இரு நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த தனி நபர்கள் யாருக்காவது அறிகுறிகள் காணப்பட்டால், அதுபற்றி கேரள சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்கும்படியும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

இதேபோன்று, நோயாளிகள் இருவரும் எந்த வழியாகக் கேரளாவை வந்தடைந்தனர் என்பது பற்றிய வழிகாட்டுக் குறிப்புப் படமும் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்