தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை ரத்து; உயரப்போகும் வரிவிதிப்பு

2 mins read
81c53040-6ca1-4252-8a0a-e1836f7460d6
இந்தியாவின் நிதித்துறைத் தலைநகர் மும்பையின் நகரக் காட்சி. - படம்: ஏஎஃப்பி

ஆகஸ்ட் 25 முதல் 29 வரை இந்தியாவுக்குச் செல்லவிருந்த அமெரிக்க வர்த்தகப் பேச்சாளர்களின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கிடையே திட்டமிடப்பட்டுள்ள ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தையும் தாமதமாகி வருவதாக இந்திய வர்த்தக, நிதியியல் செய்திக் கட்டமைப்பான என்டிடிவி பிராஃபிட், ஆகஸ்ட் 16ஆம் தேதி தெரிவித்தது.

முன்மொழியப்பட்டுள்ள இருநாட்டு வர்த்தக உடன்பாட்டுக்கான தற்போதைய பேச்சுவார்த்தைகள், மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது. 

இந்தியா மீது வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி சுமத்தப்படவுள்ள கூடுதல் வரிவிதிப்புக்கு முன்னதாக இந்தப் பேச்சுவார்த்தை ஏற்படும் என்ற நம்பிக்கை சுக்குநூறாக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் முற்பகுதியில் அதிபர் டிரம்ப், இந்தியாமீது கூடுதலாக 25 விழுக்காடு வரியை விதித்துள்ளார். இதற்கு ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய்யை இறக்குமதி செய்தது ஒரு காரணம் என்று அவர் சுட்டினார்.

ஆகஸ்ட் 27 முதல் நடப்புக்கு வரும் புதிய எண்ணெய் வரி, இந்திய ஏற்றுமதிகளின் மீதான தீர்வைகளை 50 விழுக்காடு வரை உயர்த்தும்.

அமெரிக்காவுக்கு இந்தியாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள், ஐந்து சுற்றுக்குப் பிறகு முறிந்தன. 

ரஷ்யாவிடம் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தொடர்ந்து பொருள்களைப் பெறுகையில் தம் நாடு நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

70 விழுக்காடு ஏற்றுமதி வரையிலும் பாதிப்பு

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்திய ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு பொருள்கள், தற்போது அமெரிக்காவின் 50 விழுக்காடு வரியை எதிர்நோக்குகின்றன.

இந்தியாவின் ஐசிரியர் (ICRIER) பொருளியல் கொள்கை ஆய்வு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்கியமான இந்திய வர்த்தகத் துறைகளுக்கு இது குறிப்பிடத்தக்க கவலையாக இருந்தது. 

இருந்தபோதும் இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிலிருந்து 1.56 விழுக்காடாக மட்டுமே உள்ளது.

குறிப்புச் சொற்கள்